இப்பாடசாலையானது 1994.07.01ம் திகதி ஊர்ப்பிரமுகர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஸ்ஜிதுல் இலாஹிய்யா பள்ளி வாயலின் அப்போதைய நிர்வாகத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஓர் சிறிய காணித்துண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பின் ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பிரதேச அரசியல் வாதிகளின் தலையீட்டினால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்ற அரச காணி பெறப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை ஊர்மக்களின் பூரண ஒத்துழைப்போடு மிகவும்; சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வலய மட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் முதலாம் இடத்தை பாடசாலை பெற்றுள்ளமையானது பாடசாலையின் சிறப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளாகும். இதன் கல்வி விருத்தியை அடிப்படையாகக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை அணுமதி வழங்கப்பட்டமையானது ஒரு வரலாற்றுச் சிறப்பாகும்.