(+94) 766279267
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Ayesha Girls School

ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்

கந்தளாய் வலயம்

  • Register
  • Login
Ayesha Girls School

ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்

கந்தளாய் வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
      • பள்ளி வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • மாணவ தலைவர்கள்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

விதிகள்

  • வரலாறு மற்றும் மரபுகள்
  • அடையாளம்
  • விதிகள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. விதிகள்

விதிகள்


• சகல மாணவர்களும் காலை 7.15 க்கு முன்னதாக சமுகமளித்திருத்தல் வேண்டும்.

• மாணவிகள் தூய்மையான சீருடை பர்தா அணிந்து இரட்டை ஜடை கட்டி நீளமான காற்சட்டை அணிந்து வெள்ளைச் சப்பாத்துடன் பாடசாலைக்கு சமுகமளித்தல் வேண்டும்.


• 1-5 வரையுள்ள ஆண் மாணவர்கள் தூய்மையான வெள்ளைச் சட்டை, நீல நிறத்திலான நீண்ட காற்சட்டை, கறுப்பு நிற சப்பாத்துடன் பாடசாலைக்கு சமுகமளித்தல் வேண்டும்.

• மாணவிகள் தோடு தவிர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவது, மேலதிக அலங்காரம் செய்வது போன்றன தடைசெய்யப்பட்டுள்ளது.

• சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வகுப்பறைச் சுத்தம் உட்பட சகல பொறுப்புக்களையும் பொறுப்புடனும் நேர்த்தியாகவும் நிறைவேற்ற வேண்டும்.

• காலை ஆராதனையின் போது சகல மாணவர்களும் கலந்து கொள்வதோடு இறையச்சத்துடனும் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

• சகல மாணவர்களும் வகுப்பறை ஒழுங்குமுறைகளை மீறாது நடந்து கொள்ள வேண்டும்.
• சுகல மாணவர்களும் பொறுப்புணர்ச்சியுடனும் அக்கறையுடனும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தவறும் பட்சத்தில் எச்சரிக்கையின் பின் குறிப்பிட்ட பாடவேளையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவர்.

• சக மாணவர்களுடன் சகோதரத் தன்மையுடன் பழக வேண்டும். வீணான சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவோர் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படுவர்.

• ஆசிரியர்களின் நேரிய பணிப்புரைக்கமையாத மாணவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டலுக்கு அமையப்பெற்று உடன்பாட்டுடன் இணைத்துக் கொள்ளப்படுவர்.

• பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு கலையும் வரை இடைவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களில் மாணவர்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

• மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கும் போதும் பாடசாலை கலைந்து செல்லும் போதும் நடந்து வருபவர்கள் வலப்பக்கமாக வர வேண்டும். சைக்கிளில் செல்வோர் இடப்பக்கமாக செல்ல வேண்டும்.

• மாணவர்கள் பாடசாலை நேரத்தில் தகுந்த காரணங்களுடன் வகுப்பாசிரியர், பகுதித் தலைவர், அதிபர் ஆகியோரின் அனுமதியுடனேயே வெளியில் செல்ல வேண்டும்.

• சகல மாணவர்களும் தினந்தோறும் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். அனுமதியின்றி சமுகமளிக்கத் தவறும் பட்சத்தில் பெற்றோருடன் சமுகமளிக்க வேண்டும்.

• ஒழுக்கக் கேடான விடயங்களில் ஈடுபடும் மாணவர்கள் உடனே பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுவர்.

• பாடசாலைப் புத்தகங்கள் உறையிட்டு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பாவிக்க வேண்டும்.

• பாடசாலையில் நடைபெறும் தவணைப்பரீட்சைகள், கணிப்பீட்டு செயற்பாடுகள், இணைப்பாடவிதான போட்டி நிகழ்ச்சி ஆகியவற்றில் சகல மாணவர்களும் பங்குபற்ற வேண்டும்.

• பாடசாலையில் நடைபெறும் மேலதிக வகுப்புக்கு சகல மாணவர்களும் சமுகமளித்தல் வேண்டும்.

• பாட ஆசிரியர்களால் வழங்கப்படும் செயற்பாடுகள் கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும்.

• மாணவிகள் போட்டி நிகழ்ச்சிகள், களப்பயணம், சுற்றுலா ஆகியவற்றுக்காக வெளியில் செல்லும் போது பாடசாலை நாமத்திற்கு களங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.

• மாணவிகள் பாடசாலை சொத்துக்களைப் பாதுகாப்பதோடு அவற்றை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது.

• மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் கடமைகளிலிருந்து நீக்கப்படுவார்கள்.

• பாடசாலையில் நடைபெறுகின்ற வகுப்பு வட்டங்களுக்கு சகல மாணவர்களும் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.

• கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் பாடசாலைக்கு கொண்டுவருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

 

Ayesha Girls School

ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்

கந்தளாய் வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Peraru, kantale

: (+94)0766279267

: [email protected]

Supported By

© 2026 Ayesha Girls School. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk