அதிபரின் வாழ்த்துச் செய்தி
தி/ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்
எமது பாடசாலையானது 1994.07.01 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சேருவிலை தேர்தல் தொகுதியில் உள்ள ஒரேயொரு பெண்கள் பாடசாலை ஆகும். இப் பாடசாலையின் பௌதீக ஆளணித் தேவைப்பாடுகளை பொறுத்தவரையில் இன்னும் நிவர்த்திக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இதேவேளை கல்வி அடைவுகள் மற்றும் இணைப் பாடவிதான வெற்றிகள் தொடர்பிலும் அண்மைக்காலங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கான முயற்சிகளும் விசேட செயற்திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2021ம் ஆண்டைய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் வலயமட்டத்தில் முதலாம் இடத்தை எமது பாடசாலை பெற்றமையானது எமது முயற்சிகளின் விளைவாக நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும். அத்தோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் விளையாட்டு விடயங்களிலும் எமது பாடசாலையானது குறிப்பிட்ட வெற்றிகளை பெற்று வருகின்றமையானது எமக்கெல்லாம் மிகுந்த சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது.
மேற்படி விடயங்களுக்காக எம்முடன் தோளோடு தோள் நின்ற உழைக்கின்ற வலயக்கல்விப் பணிமனையின் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவிகள் அத்தோடு பெற்றோர்கள் மற்றும் இரவு பகலாக உழைக்கின்ற ஆசிரிய ஆசிரியைகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர்
தி/ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்.