|
1994.02.01 - 1996.03.14 |
Mrs.ஹீனாயா |
|
இவர் இப்பாடசாலையின் முதலாவது அதிபர் என்ற தடத்தைப் பதித்தவர். இரண்டு வருடங்கள் அதிபராகக் கடமை புரிந்து பாடசாலையின் வளர்ச்சியில் பங்காற்றினார். |
|
1996.03.15 - 200.02.24 |
Mrs.ஆமினா சாலிஹீன் |
|
இவர் எமது பிரதேசத்தின் முதல் பெண் ஆசிரியை என்ற சிறப்பைப் பெற்றவர். இப்பாடசாலையில் 4 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி இப் பாடசாலை வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காளியாகவும் விளங்குகிறார் |
|
2000.02.25 - 2011.08.28 |
Mr.S.M.ஹனீபா |
|
இவரது காலப்பகுதியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இப் பாடசாலை மகாவித்தியாலயமாக உயர்த்தப்பட்டதோடு தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர பரீட்சைகளிலும் மாணவர்கள் சித்தியடைந்தனர். |
|
2011.08.29 - 2015.06.24 |
Mr.A.K.M.நசூர் |
|
இவர் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் பெறுபேறுகளை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தியவர். இவரது காலப்பகுதியில் 2012 ஆம் ஆண்டு இப்பாடசாலை கந்தளாய் வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு முதன்முதலில் இப்பாடசாலையிலிருந்து இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொண்டனர். அத்தோடு 'தேசத்தின் மகுடம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கணினி ஆய்வுகூட அறை அமைக்கப்பட்டமை, நூலகக் கட்டிடம் மற்றும் Muslim Aid உதவியுடன் நூலகத் தளபாடங்கள் பெறப்பட்டமை போன்றன இவரது காலப்பகுதியினுள் ஏற்பட்ட சில அபிவிருத்திகளாகும். |
|
2015.06.25 - 2019.01.31 |
Mr.M.C.நசூர்தீன் |
|
இவர் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் பங்காற்றிய சிறந்த நிர்வாகத் திறனும், ஆளுமையும் கொண்ட ஒரு நபர். இவரது காலப்பகுதியில் க.பொ.த சாதாரணதர பெறுபேறுகள் சிறப்பாக அமைந்ததோடு 2018 ஆம் ஆண்டு 9 மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைந்தனர். தேசிய மட்ட மீலாத் போடடிகள், மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்ூறனர். மேலும் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற திட்டத்தின் கீழ் பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்கள் கொண்டுவரப்பட்டமை போன்ற அபிவிருத்திகளைக் குறிப்பிடலாம். |
|
2019.02.01 - 2019.06.13 |
Mrs.M.M.S.உசேன் |
|
இவர் முன்னாள் அதிபர் நசூர்தீன் சேர் அவர்களின் காலப்பகுதியில் பிரதி அதிபராகக் கடமையாற்றி அவருக்குப் பின் நான்கு மாதங்கள் தொடர்ந்து அதிபராகவும் தனது பணியை மேற்கொண்டார். |