எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

எமது பாடசாலை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரேயொரு பெண்கள் பாடசாலையாகும். 5ஆம் தர புலமைப்பரிசில், க.பொத.சாதாரணதரம் மற்றும் க.பொத.உயரதரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதோடு, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அதிகமான வெற்றிகளைப் பெறக்கூடிய ஒரு சிறந்த பாடசாலையாகத் திகழ்கிறது. அத்தோடு அறிவு, ஆளுமை, ஒழுக்கம், ஆன்மீக மேம்பாடுடைய நற்பிரஜைகளை உருவாக்கி எமது பிரதேசத்தில் ஒரு முன்மாதிரியான பாடசாலையாகத் திகழ வைப்பதே எமது பாடசாலை சமூகத்தின் நோக்கமாகவும் உள்ளது.






