சீரிய அறிவினை சிறப்புற மாந்தருக்கு
வழங்கிய இறையோனே.
எம்மை நேரிய பாதையில் நிலைபெறச் செய்திட
அருளினைத் தருவாயே.
மாமறை மூலமும் மாநபி மூலமும்
அறிவினைத் தந்தோனே.
என்றும் மாண்புறு கல்வியை மகிழ்வுடன் கற்றிட
இறையருள் புரிவாயே.
சீரிய அறிவினை சிறப்புற மாந்தருக்கு
வழங்கிய இறையோனே.
எம்மை நேரிய பாதையில் நிலைபெறச் செய்திட
அருளினைத் தருவாயே.
ஆயிஷா மகளிர் கல்விக்கூடம்
புகழ் பெற்று ஓங்கிடவே
இன்னும் அலைகடல் போலவே கலைபல
பொங்கிட அருள் மழை பொழிவாயே.
சீரிய அறிவினை சிறப்புற மாந்தருக்கு
வழங்கிய இறையோனே.
எம்மை நேரிய பாதையில் நிலைபெறச் செய்திட
அருளினைத் தருவாயே.
பெட்டகம் அறிவினை பேராளி கஸாலி
பேரொளி எமைச் சூழ
உன்னை இரு கரம் ஏந்தி சிரம் பணிகின்றோம்
செய் பிழை பொறுப்பாயே.